6 Oct 2020

சிறுவர் மற்றும் வளரிளம் பருவத்தினரின் மீள் எழும் சக்தியை பயன்படுத்தி சவால்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கக் கூடியவாறு சமூகமட்ட பொறிமுறைகளை உருவாக்கும் செயற்றிட்டம்.

SHARE

சிறுவர் மற்றும் வளரிளம் பருவத்தினரின் மீள் எழும் சக்தியை  பயன்படுத்தி சவால்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கக் கூடியவாறு சமூகமட்ட பொறிமுறைகளை உருவாக்கும் செயற்றிட்டம்.

BMZ,CBM    நிறுவனங்களின்  நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு  உளநல உதவி நிலையம் (PPCC)  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட  10 கிராம சேவையாளர் பிரிவுகளில் முன்னெடுத்துவருகின்ற “சிறுவர் மற்றும் வளரிளம் பருவத்தினரின் மீள் எழும் சக்தியை  பயன்படுத்தி சவால்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கக் கூடியவாறு சமூகமட்ட பொறிமுறைகளை உருவாக்குதல்” எனும் திட்டத்தின் கீழ், விசேடமாக உருவாக்கப்பட்ட  கொவிட் -19  உதவி திட்டதிற்கு அமைய 1000 பயனாளிகளுக்கு 3 மாதங்களுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை(06) புன்னைச்சோலை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

மாற்று வலுவுள்ளோர், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் என தலா 100 குடும்பங்கள் 10 கிராமசேவகர் பிரிவில் பிரதேச செயலகம் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.அத்தோடு  தொடர்ச்சியாக  

மூன்று மாத காலங்களுக்கு  இவ் உலர்  உணவு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்களுக்கு பொறுப்பு கூறும் முகமாக, பயனாளிகள்  தங்கள்  பிள்ளைகளின் நாளாந்த கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டுமென PPCC நிறுவனமும் நிதி வழங்குநர்களான BMZ  மற்றும் CBM நிறுவனத்தாரும் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன், மண்முனை வடக்கு உதவி திட்டமிடல் இயக்குனர் சுதர்சன், அருட் தந்தை சட்குணநாயகம், CBM நிறுவனத்தின் திட்ட இனைப்பாளர் மற்றும் கிராம சேவர்களும் கலந்து கொண்டனர்.












SHARE

Author: verified_user

0 Comments: