மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் வயல் காணி ஒன்றில் சந்தேகமான நிலையில் புதைத்து வைக்கப்பட்ட பெட்டி ஒன்று தென்பட்டபோது இச் சம்பவத்தை விவசாயி ஒருவர் வியாழக்கிழமை (29) பொலிசாருக்கு தெரிவித்ததையடுத்து படையினர் அதனை மீட்ட போது குறித்த பெட்டியில் மண் நிரம்பிக் காணப்பட்டது என வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு, அரசடிச்சேனை வயல் பகுதியில் மேற்படி பெட்டி உள்ள தகவல் பொலிசாருக்கு கிடைத்ததை தொடர்ந்து நீதி மன்ற அனுமதியினை பெற்று வவுணதீவு தாண்டியடி விசேட அதிரடிப்பைடையின் குண்டு அகற்றும் பிரிவினர்களால் குறித்த பெட்டியை வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் தோண்டி பார்த்தே போது அதில் மண் நிரம்பியிருந்தது.
குறித்த பெட்டி ஆயுதங்கள் வைக்க பயன்படுத்தும் இரும்பு பெட்டி என்பதுடன் இப் பிரதேசம் கடந்த காலங்களில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment