14 Oct 2020

பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக கருணா நியமனம்.

SHARE

பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக கருணா நியமனம்.

முன்னாள் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும், கருணா அம்மான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகமான அலரிமாளிகையில் வைத்து அவர் செவ்வாய்க்கிழமை 13.01.2020 தனது பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகளவு வாக்குகளைப் பெற்றாலும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்திருக்கப்படவிலலை. இந்நிலையில், தனக்கு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கருணா அம்மான் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கமைய பிரதமரால் இவ்வாறு பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




SHARE

Author: verified_user

0 Comments: