கலாபூசணம் அரங்கம் இரா.தவராஜாவின் “மட்டுநகரின் இன்னுமொரு பக்கம்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை 8.30 மணிக்கு மட்டக்களப்பு செல்வநாயகம் ஞாபகார்த்தமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பில் மிக நீண்ட காலமாக இலக்கியம் கலை எழுத்துத்துறை என பல நூல்களையும் கட்டுரைகளையும் அரங்கம் எனும் சஞ்சிகைமூலமாக தனது எழுத்து ஆக்கங்களையும் தனது முயற்சியினால் மட்டக்களப்பி;ல் வெளியிட்டுவந்தவர் கலாபூசணம் அரங்கம் இரா.தவராஜா அவர்கள்.
கலை இலக்கியத்துறையிலும் பல ஈடுபாடுடைய இவர் மட்டக்களப்பில் 1950 ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு எவ்வாறு இருந்துள்ளது என்பதை அக்காலங்களில் கானப்பட்ட மக்கள் வாழ்கை அமைப்புக்கள் அந்தமக்களின் தேவை என்ன என்பது தொடர்பான விடையங்களை எல்லம் தன்னுடைய நூலுக்குடாக தற்காலத்து மக்களுக்கு பிரதிபலித்துக் காட்டுகின்ற கால கண்னாடியாக இந் நூல் அமைந்துள்ளது.
இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக பேராசிரியர் சி.மௌனகுரு மற்றும் விசேட அதிதியாக சீ.முருகமூர்த்தி செயலாளர் கனடா பாடுமீன் கழகம் ஜனாப் முகமட் கலில் ஹஐpயார் சமூக செயற்பாட்டாளர் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இன் நிகழ்வினை தலைமைதாங்கி நடாத்துவதற்காக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
0 Comments:
Post a Comment