மட்டக்களப்பு மாவட்டத்திலும், இலங்கையின் ஏனைய பல பாகங்களிலுமிருந்து மிகவும் அற்பணிப்புடன் தனது சேவையை மேற்கொண்டு வந்த அவரது சேவை இலங்கை மக்களுக்கு மிகவும் சிறந்த சேவையாக அமைந்திருந்தது. என அவரது ஓய்வையடுத்து பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
வானிலை அவதான நிலையத்தின் நிலையப் பெறுப்பதிகாரியாக அவர் கடமையாற்றி வந்ததோடு, வானிலை தொடர்பில் ஊடகவியலாளர்கள், துறைசார்ந்த அரச மற்றும் அரச சார்பற்ற உத்தியோகஸ்த்தர்கள், கடற்தொழிலாளர்களுக்கும் விவசாயிகள், உள்ளிட்ட பலருக்கும் வளவாளராகக் கலந்து கொண்டு பல பயிற்சிகளையும் வழங்கி வந்ததோடு, பொதுடமக்களுக்கும் இவ்விடையத்தில் உடனுக்குடன் அறிவுறுத்தல்களையும் மேற்கொண்டு வந்தவதாவார்.
தான் ஓய்வு பெற்றுச் சொன்றாலும் மக்களுக்கான எனது சேவை தொடரும் என ஓய்வு பெற்றுச் செல்லும் வானிலைய அவதான நிலையத்தின் சிரேஸ்ட்ட பொறுப்பதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment