மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், பொது சுகாதார திணைக்களம், பொலிஸார் இணைந்து பொது போக்குவரத்து வாகனங்களில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஓட்டும் நடவடிக்கை ஒன்றை வியாழக்கிழமை (29) மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து வைத்தனர்.
இந்த கொரோனா தொற்று விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.என்.எஸ்.மென்டிஸ், பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஆர்.குமாரசிறி ஆகியோரின் ஆலோசனைக்கமைய மாவட்ட போக்குவரத்து பொலிஸார் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.பி.ஏ.சரத்சந்திர தலைமையிலான போக்குவரத்து பொலிஸார் மற்றும் தேசிய இளைஞர்சேவை மன்ற மட்டக்களப்பு பணிப்பாளர் ஆலிதீன் கமீர், ஆகியோர் இணைந்து இந்த விழிப்பூட்டும் நடவடிக்கை பேரூந்து நிலையத்தில் ஆரம்பித்தனர்.
இதற்கமைய இலங்கை போக்குவரத்து பஸ்வண்டிகள், தனியார் போக்குவரத்து பஸ்வண்டிகள் என்பவற்றில் இந்தஸ்டிக்கர்கள் ஓட்டும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
0 Comments:
Post a Comment