இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் பிராந்தியக் காரியாலயத்தில் விற்பனைக் கிளை திறந்து வைப்பு.
இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் பிராந்தியக் காரியாலயத்தில் மரமுந்திரிகை உற்பத்திப் பொருட்களின் விற்பனைக் கிளை திறந்து வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு வந்தாறுமூலையில் ஞாயிறன்று 18.10.2020 இடம்பெற்றது.
இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய இணைப்பாளர் கணேசன் மலைமகள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபன தலைவர் சட்டத்தரணி சாரங்கா காஞ்சனி ரத்னாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
வந்தாறுமூலை நூலக வளாகத்தில் அமைந்துள்ள இந்தக் கிளையில் தரமான மரமுந்திரிகை உற்பத்திப் பொருட்களையும் மரமுந்திரிகைக் கன்றுகளையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபன தலைவர் சட்டத்தரணி சாரங்கா காஞ்சனி “வருடத்திற்கு 7 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மரமுந்திரிகை நடுதல் எனும் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மரமுந்திரிகை அபிவிருத்தித் திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலும் மரமுந்திரிகைகைச் செய்கைக்குப் பிரபல்யமான கடற்கரையோரங்களை அண்டிய பிரதேசங்களில் மரமுந்திரிகை அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.
இந்நிகழ்வில் இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபன அலுவலர்களான முகாமைத்துவ உதவியாளர் என்.ஜே.ஷாலினி மரமுந்திரிகை சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பி. சிவநாதன் கள உதவியாளர்களான எஸ்.சாந்தி எஸ்.தேவராஜன் ஆகியோருட்பட இன்னும் பல அலுலர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment