இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை முதல் இரண்டாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சற்று முன்னர் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த தகவலை அறிவித்துள்ளார்.
முன்னதாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
அந்தப் பகுதியிலுள்ள பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் அனைத்தையும் உடனடியாக மூடுமாறு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் இரண்டாம் தவணைக்கான விடுமுறையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கம்பஹாவில் இன்று காலை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment