29 Oct 2020

பட்டாபுரத்தில் ஒருவருக்கு கொரோனோ பொலிசார் சுகாதாரத் துறையினர் மற்றும் பொலிசார் தீவிர பாதுகாப்பு.

SHARE

பட்டாபுரத்தில் ஒருவருக்கு கொரோனோ பொலிசார் சுகாதாரத் துறையினர் மற்றும் பொலிசார் தீவிர பாதுகாப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பட்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக பி.சி.ஆர் பரிசோதனையில் வியாழக்கிழமை (29) கண்டுப்பிடிக்கப்பட்டதையடுத்து 31 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கொழும்புக்கு சென்று திரும்பியதாக பொது சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய குறித்த நபரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து குறித்த தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறாமல் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கவனமாக செயற்படுமாறு கோட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில மக்கள் பாதுகாப்பபக இருக்குமாறும், சுகாதார நடைமுறைகளை அவசியம் கைக் கொள்ளுமாறும், களுவாஞ்சிகுடி பொலிசாரும், சுகாதார பிரிவினரும், பிரதேச சபையினரும், ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: