மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கான புதிய பஸ் சேவை ஒன்று இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் அவர்களினால் திங்கட்கிழமை (05) காலை 5 மணிக்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த பல வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து திருகோணமலைக்கு சேவைக்காக நாளாந்தம் சென்று வரும் நூற்றிற்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் பல்வேறுபட்ட சிரமங்களுக்கு மத்தியில் தமது சேவை நிலையங்களுக்கு கடமைக்காக சென்று வந்த நிலையில் இந்த பஸ் சேவை திங்கட்கிகிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை போ.சபையின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் எச்.ஏ.எம். உவைஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
0 Comments:
Post a Comment