அரசாங்க அதிபராக கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் மதத்தலைவர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட அரச அதிபர் கே. கருணாகரன் மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபரினால் நினைவுப் பரிசொன்றும் ஆயர் பொன்னையா ஜோசப்பிற்கு வழங்கி வைக்கப்பட்டது.
இவ்விஜயத்தின்போது உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், நிருவாக உத்தியோகத்தர் கே. தயாபரன், மாவட்ட தகவல் அதிகாரி. வீ. ஜீவானந்தன் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.
0 Comments:
Post a Comment