உதவி விவசாயப் பணிப்பாளர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வீ.பரின்பராஜா, உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ்.சித்திரவேல், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு அதிகாரி ஏ.ரவிராஜ், விவசாய போதனாசிரியர் எம்.கலைமோகன் , விவசாய பாடவிதான உத்தியோகத்தர் ஜமால்டீன, விவசாய தொழிநுட்ப உத்தியோகத்தர் தேவரூபன், மற்றும் விவசாயத் திணைக்கள உத்தியாகத்தர்கள் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்பாது காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முழு மானியமாக வழங்கப்பட்ட உதவியினூடாக செய்கைபண்ணப்பட்ட பயிர்களின் அறுவடையும் அதனைத்தொடர்ந்து பயிச் நடுகை ஆரமப நிகழ்வும் இடம்பெற்றது.
குறைந்த நீர்பாசன வசதியுள்ள பிரசேசங்களில் இவ்வாறான மூன்றாவறு கால பயிர்சய்கை மட்டக்களப்பு மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் ஆலோசனை மற்றும் கண்காணிப்புக்கமைவாக உலகவங்கி நிதி உதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் கீழ் சிறந்தமுறையில் செய்கைபண்ணப்பட்டு திட்டம் வெற்றியளித்துள்ளதாக பிரதி விவசாயப் பணிப்பாளர் வீ.பரின்பராஜா, தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment