(ஜனா)
இலங்கையின் அனைத்து மாநகர முதல்வர்களுக்கான மாநாடு யாழ்பாணத்தில் இடம்பெற்றது.
உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினால் நடாத்தப்படும் மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேளன மாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்றது.
யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் காலை 9 மணி அளவில் தமிழ் சம்பிரதாய முறைப்படி, மங்கள வாத்தியங்கள் இசைக்க அனைத்து மாநகர முதல்வர்களும் மாநாடு நடைபெறும் தனியார் விடுதிக்கு அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வரவேற்பு உரையாற்றி மாநாட்டை ஆரம்பத்து வைத்தார்.
இந்த மாநாட்டில், மாத்தளை, காலி, மட்டக்களப்பு, மாத்தறை, நுவரெலியா, அநுராதபுரம் உள்ளிட்ட மாநகர முதல்வர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment