6 Oct 2020

விபத்தில் பலியெனத் தகவல் கார் சாரதி கைது.

SHARE



(ஏ.எச்.குசைன்) 

வீதி விபத்தில் சிக்கியவர் தனது 38வது பிறந்த தினத்தில் மரணம் சகோதரரும் கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் இதே இடத்தில் இடம்பெற்ற விபத்தில் பலியெனத் தகவல் கார் சாரதி கைது.

மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலை சத்துருக்கொண்டான் பகுதியில் ஞாயிறு இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி படுகயமடைந்தவர் சிகிச்சை பயனின்றி மரணமடைந்து விட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்றும் மோட்டர் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற தன்னாமுனை விபுலானந்தபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஞானசிங்கம் ஜீவானந்தம் என்பவரே உயிரிழந்துள்ளார்.


கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் தன்னாமுனைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கார் மட்டக்களப்பில் இருந்து தன்னாமுனை நோக்கிச் சென்ற மோட்டர்சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டர் சைக்கிள் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரின் சகோதரர் இதே இடத்தில் கடந்த ஒருவருடத்துக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்துள்ளாரென தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்று மரணித்தவரின் 38வது பிறந்த தினமும் இன்றாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விபத்திற்குக் காரணமாக இருந்த கார் சாரதி கைது செய்யப்பட்டு திங்கட்கிழமை 05.10.2020 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.ஏ. றிஸ்வான் முன்னிலையில் ஆஜரர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சடலம் உடற்கூறாய்வுப் பரிசொதனைக்காக மட்டக்களப்பு போதகா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போக்குவரத்தப் பொலிஸார் மேற்கொண்டு வரகின்றனர்.




SHARE

Author: verified_user

0 Comments: