கோட்டைக்கல்லாற்றில் தரம் ஐந்து புலைமைப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலவச கல்விக்கருத்தரங்கு நடைபெற்றது.தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும்,படகு தொலைக்காட்சியும் இணைந்து பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாற்றில் இவ்வாண்டு(2020)தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலவசமான கல்விக்கருத்தரங்கு ஒன்று இன்று செவ்வாய்கிழமை(1) கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் களுதாவளை பிரதேசசபை உறுப்பினர் த.சுதாகரன் தலைமையில் பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலய அதிபர் எஸ்.கணேஸ்வரன்,மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பாடசாலையின் ஆசிரியரும்,கருத்தரங்கு வளவாளருமான சீ.ஜெயானந்தன்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் யோகராசா சந்திரக்குமார்,படகு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ச.மணிசேகரம், பெற்றோர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
இதன்போது புலைமைப்பரீட்சை மாணவர்களுக்குரிய வினா அமைப்பு,புள்ளித்திட்டமிடல்,எவ் வாறு அதிக புள்ளிகளை பெறுவது?,சித்திக்கான வினைத்திறன் விடயங்கள்,உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் வளவாளரினால் பல்லூடகத்தின் மூலம் தெளிவூட்டப்பட்டது.இக்கருத்தரங் கில் சுமார் 200 மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
0 Comments:
Post a Comment