தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்பவராகவே அமையவேண்டும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரை நியமிப்பதே பொருத்தமானதாக அமையும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் செயலாளராக இருந்த துரைராஜாசிங்கம் அண்மையில் தனது பதவியில் இருந்து விலகுவதாக கட்சிக்கு எழுத்துமூலமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக பல கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.எனினும் யாரை நியமிப்பது என கட்சி கூடி தீர்மானிக்கும்.
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக ஏற்கனவே இருந்தவர் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரநிதித்துவம் செய்தே இருந்தார்.
எனவே புதிதாக நியமிக்கப்படும் பொதுச்செயலாளரும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரநிதித்துவம் செய்பவராகவும் நிர்வாக திறமையுடைய மொழி ஆற்றல் உள்ள ஒருவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என ஏற்கனவே கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும் கூறியுள்ளேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.(t:w.n)
0 Comments:
Post a Comment