6 Sept 2020

திருகோணமலையில் தொழில் வாண்மையுடனான வெகுசன ஊடக டிப்ளோமா கற்கை நெறி

SHARE



(ராஜ்) 

திருகோணமலையில் தொழில் வாண்மையுடனான வெகுசன ஊடக டிப்ளோமா கற்கை நெறிக்கான ஆரம்ப நிகழ்வு (05) நேற்று குளக் கோட்டன் மண்டபத்தில் இடம் பெற்றது.

எழுத்தாணி கலைப் பேரவை மற்றும் அகம் மனிதாவிமான வள நிலையம் ஆகியன இணைந்து நடாத்தும் இப்பயிற்சியை நெறியினை ஊடகக் குரல் வலையமைப்பு  நிறுவனம் (voice of media Network ) பயிற்றுவிக்கவுள்ளது.

அகம் மனிதாபிமான வள நிலையத்தின் AHRC இணைப்பாளர் க.லவகுகராஜா மற்றும் எழுத்தாணி கலைப் பேரவையின் தலைவர் வ.ராஜ்குமார் ஆகிய இணைத் தலைமைகளின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு  பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட உதவி அராங்க அதிபர் என். பிரதீபன்  கலந்து கொண்டிருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் கோ.சத்தியப்பிரியா கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக சிரேஸ்ட விரிவுரையாளர் சிவப்பிரியா ஸ்ரீராம் மட்டக்களப்பு அருவி பெண்கள் வலையமைப்பு பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜெனன் ஊடக குரல் வலையமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் அ.அருள்சஞ்சித் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தின் தூரப்பிரதேங்களான மூதூர் வெருகல் குச்சவெளி கங்குவேலி ஆலங்கேணி கிண்ணியா தம்பலகாமம் நிலாவெளி கன்னியா போன்ற பிரதேங்களில் இருந்து பயிலுனர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு உரையாற்றிய பிரதம விருந்தினர் தனது உரையில் ஊடகங்கள் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொனர்வதுடன் அரசாங்கம் மற்றும் தனியார் அமைப்புக்களில் அப்பிரச்சினைக்கான தீர்வுகள் எவ்வாறு பெற முடியும் என்பதனையும் எடுத்துரைக்க வேண்டும் ஊடக தர்மத்தையும் மக்கள் நலனையும் நோக்காக கொண்டு செய்திகளை வெளியிட்டு இந்த மாவட்டத்திற்கு  சேவை வழங்கவே இப்பயிற்சியை தங்களுக்கு வழங்கப்படுகின்றது. இதனை செய்ய உங்களால் முடியும் இத்துடன் அவ்வாறான ஒரு முக்கியமான பணியை செய்யும் அகம் மனிதாவிமான வள நிலையம் மற்றும் எழுத்தாணி கலைப் பேரவை ஊடக குரல் வலையமைப்பு ஆகியவற்றுக்கு பயிலுனர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.என மாவட்ட உதவி அராங்க அதிபர் என பிரதீபன் தெரிவித்தார்.














SHARE

Author: verified_user

0 Comments: