12 Sept 2020

சுற்றுலா துறையினை மேம்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தினை பாரிய வேலைத்திட்டம்.

SHARE

சுற்றுலா துறையினை மேம்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தினை பாரிய வேலைத்திட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப்பயணிகளின் சுற்றுலாமையமாக மாற்றிமைப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை (11) சுற்றுலாத்துறை அமச்சின் செயலாளர் எஸ்.கெட்டியாராச்சி  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து மாவட்ட அரசாங்க அதிபரின்  திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

நடைபெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டை சுற்றுலாமையமாக மாற்றியமைப்பது தொடர்பான ஆராயப்பட்டது அதன்போது ஒவ்வெருகட்டமாக சுற்றுலாத்துறையினருக்கு ஏற்றவகையில் எல்லா வசதிகளையும் கொன்டதாக மாற்றி அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் தங்களின் கருத்துக்களை வெளியிட்டனர் அப்போது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமாக காணப்படுவதனால் இதனை ஒரு வருமானம் ஈட்டக்கூடிய இடமாகவு இருக்கின்ற பழமையை மாறாமல் கவர்சிமிக்கதாக்கி கொண்டு முன்னெடுப்பதற்கு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

கோட்டையில் கலாச்சார விழிமியங்களை பிரதிபலிக்கின்ற நிகழ்ச்சிகள் பண்பாட்டு கலாச்சார உடைகள் உணவுகள் நுதன சாலைகள் மற்றும் நமது மக்களின் வணக்கமுறைகள் என மாவட்டத்திற்கென தனித்துவமான பண்பாட்டு பின்ணனிகளை பிரதிபலிக்கின் விடையங்களையும் கொண்ட ஒரு மத்திய நிலையமாக மாற்றி அமைதற்கான முதற்கட்ட வேலையாக தகவல் மையம் ஒன்றை அமைத்து அதனுடாக செயற்படுத்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினரை கவரக்கூடிய இடங்களாக பல இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது அதில் முக்கியமானதாக உன்னிச்சை தொப்பிக்கல் மலை பொண்டுகள் சேனை பனிச்சங்கேனி மட்டக்களப்பு வாயில் மிதக்கும்படகு வீடுகளை அமைத்து அதில் சிற்றுன்டிச்சாலைகளை அமைப்பது போன்ற முன்மொழிவுகள் செய்யப்பட்டது.

தொப்பிக்கல் மலையில் இயற்கைப் பூங்காக்களை அமைப்பது காட்டுவிலங்குகளை அவதானிக்க கூடியதான சுற்றுலாத்துறையினரை கவரக்கூடி திட்டங்களை செய்வதற்கும் மேலும் மாவட்டத்தில் சுற்றுலாதலங்களை அடையாளம் கண்டு அபிவித்தி செய்வதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.    

நடைபெற்ற கூட்டத்திற்கு மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷ்சி ஸ்ரீகாந் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன், எஸ்.கசின் பணிப்பாளர் அபிவிருத்தி, திருமதி உமா நிரஞ்சன் பணிப்பாளர் திட்டமிடல்  சசிகலா புண்ணியமூர்த்தி பணிப்பாளர் திட்டமிடல் மற்றும்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு திணைக்களம் வனஐPவராசிகள் திணைக்களம் அவுஸ்ரேலிய நிறுவனப்பிரதிநிதிகள் சுற்றுலாத்துறை சார்ந்த திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு தக்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: