மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து இரு இளைஞர்கள் மரணம்.
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீPதியின் தாழங்குடா சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் செவ்வாய்கிழமை (01) இரவு 10 மணியளவிள் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பிரயாண பேருந்தொன்றுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோதுண்டதில் இப்பாரிய விபத்துச் சம்பவித்துள்ளதாக அறியமுடிகின்றது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்கள், புதுக்குடியிருப்பு காளி கோயில் வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய எஸ்.டிலுக்சன் மற்றும் 22 வயதுடைய நிலுக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் போரூந்தின் சாரதியும் நடாத்துனரும் தப்பியோடியுள்ளனர். இவ்விபத்துச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி போக்குவரத்து போலிஸார் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.
0 Comments:
Post a Comment