8 Sept 2020

சமுர்த்தி தேசிய சமூதாய நிதியத்திற்கான கட்டுப்பாட்டு சபையினை உருவாக்குவதற்கான மாவட்டமட்ட இரண்டு அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

SHARE

சமுர்த்தி தேசிய சமூதாய நிதியத்திற்கான கட்டுப்பாட்டு சபையினை உருவாக்குவதற்கான மாவட்டமட்ட இரண்டு அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

சமுர்த்தி சமூதாய அடிப்படை அமைப்புக்களின் மாவட்ட கூட்டம் இன்று மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தினை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது.

சமுர்த்தி மாவட்ட சமூதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களில் இருந்து அங்கத்தவர்களை தெரிவுசெய்து சமுர்த்தி தேசிய சமூதாய நிதியத்திற்கான கட்டுப்பாட்டு சபையினை உருவாக்குவதற்கான மாவட்டமட்ட இரண்டு அங்கத்தவர்களை தெரிவுசெய்வதற்கான கூட்டமாக அமைந்திருந்தது

தெரிவு செய்யப்பட்டு அனுப்பிவைப்படுகின்றவர்கள் அங்கு நிகழும் தேசியமட்ட தீர்மாணங்களுக்கு இவர்களின் பிரசன்னமும பங்களிப்புக்களும்; அங்கு எடுக்கப்படுகின்ற திர்மானங்களுக்கு அவசியமாக கருதப்படுகின்றது.

சமுர்த்தி சமூதாய அமைப்புக்களினால் சேகரிக்கப்படுகின்ற பணம் மகாசங்களில் வைப்பு செய்யப்பட்டுள்ளது அந்த நிதியின் மூலம் அடிப்படை வசதிகள் அற்ற மிகவும் வறுமைக்கொட்டிக்குள் வாழ்கின்ற குடும்பங்களுக்கு முகாமைத்துவ பணிப்பாளர்கள் மகாசங்கங்களுக்கு உதவுமாறு அரசாங்க அதிபர் வேண்டுகொள் விடுத்தார்.

தற்போது மகாசங்களின் பணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 15. மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படாமல் உள்ளது இப்பணத்தினை கொண்டு தெவையான திட்டங்களை அடையாளம் கண்டு மக்களுக்கு உதவுவதற்கு முன்வரவேண்டும் என அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் திருமதி அமுதகலா பாக்கியராஜா தலைமைத்துவ முகாமையாளர் ஜெ.எப்.மனேகிதராஜ் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர்கள் சமுர்த்தி மகாசங்களின் தலைவர்கள் செயலாளர்கள் கலந்து கொண்டனர். 






SHARE

Author: verified_user

0 Comments: