மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையில் அமைந்துள்ள பாடசாலைகளிலிருந்து இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை(20) களுதாவளை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது புகழ் வெளியீட்டாசிரியர் லோ.விஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
களுதாவளையில் இருந்து பல சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் சமூக பொருளாதார அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பட்டடில் நடைபெற்ற இவ்வழிகாட்டல் கருத்தரங்கில், 2020 பரீட்சை வினாத்தளின் அமைப்பு, பகுதி – 01 வினாத்தாளில் விடையளிக்கும் நுட்பங்கள், பகுதி – 02 மீட்டல், பரீட்சையை எதிர்கொள்வதங்கான ஆலோசனைகள், இவ்வாண்டு பரீட்சையில் எதிர்பார்க்கப்படும் விடையங்கள், உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment