(குணா)
திருகோணமலை உப்புவெளி கடற்கரை, சமூக ஆதரவாளவர்களால் சுத்தமானது.
சர்வதேச கரையோர தூய்மைப்படுத்துதல் தினம் மற்றும் தேசிய கடல் வளங்கள் பாதுகாப்பு வாரம் நிகழ்வு புதன்கிழமை (23) திருகோணமலை அரசாங்க அதிபர் ஜே.ஏஸ்.டி.எம்.அசங்க அபேயவர்தன தலைமையில் உப்புவெளி கடற்கரையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யாஹம்பத் மற்றும் அரச அரச சார்பற்ற நிறுவனங்கள், ரோட்டரி கழக உறுப்பினரகள், முப்படைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன், பிரதேச சபை உறுப்பினர்கள், செயலாளர், ஊழியர்கள், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு, உப்புவெளி கடற்கரையில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டது.
0 Comments:
Post a Comment