“சிறுவர் துஷ்பிரயோகமற்ற கல்விச் சூழலை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பொறுப்புக்கள்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட “அருவி” பெண்கள் வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை 25.09.2020 இஅடம்பெற்றது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பட்டிருப்பு கல்வி வலயம் ஆகியவற்றின் பங்களிப்போடு இடம்பெற்ற இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த துறைசார்ந்த சுமார் 100 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சட்டத்தரணி மயூரி மேலும் தெரிவித்ததாவது,
கள விஜயங்களில் மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகள். பொலிஸ் நிலையங்களில் இருந்து கிடைக்கின்ற தகவல்கள், மனித உரிமைகள் ஆணைக்குழவிற்குக் கிடைக்கின்ற முறைப்பாடுகள் நீதிமன்ற வழக்குகள் என்பனவற்றிலிருந்த பெறப்பட்;ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் சமூகத்திற்கு சிறுவர் துஷ்பிரயோகமற்ற கல்விச் சூழலை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பொறுப்புக்கள் பற்றிய விழிப்பூட்டலைச் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தமாக ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது ஆசிரியர் தொழிலுள்ள உலகிலுள்ள அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டக் கூடியது.
ஒவ்வொரு மனிதனின் அடிப்படைக் கல்வி அறிவிற்கும் அடித்தளமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள்.
சிறுவர்கள் மத்தியில் வீடுகளிலிருந்து ஆரம்பிக்கின்ற பிரச்சினைகளாயினும் பாடசாலைகளிலே சக மாணவர்களோடு ஏற்படுகின்ற பிரச்சினைகளாயினும் அல்லது சமுதாயத்திலிருந்து வருகின்ற பிர்சினைகளாயினும் சரி ஆசிரியர் மாணவர் தொடர்பாடல்களில் நடத்தைகளினாலும் ஏற்படுகின்ற பிரச்சிகைளாக இருந்தாலும் அனைத்துப் பிரச்சினைகளையும் வீட்டிலுள்ள தாய் தகப்பன் சகோதரர்களைத் தாண்டி முதலில் மாணவர்கள் கூற முற்படுவது தனக்குக் கற்பிக்கின்ற ஆசிரியர்களிடம்தான். இதுதான் நடைமுறையிலுள்ள யதார்த்தம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற 10 பிரதேச செயலகப் பிரிவுகளிலே மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.
இந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கிராம மக்களிடம் கள ஆய்வுகளைச் செய்ததன் அடிப்படையில் மாணவர்கள் மீது பல்வேறு வகைப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான கருத்தரங்குகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்களில் நடாத்த ஏற்பாடுகளைச் செய்து நடத்தி வருகின்றோம்.
மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் அகிய முத்தரப்பினருக்கும் விழிப்புணர்வூட்டல்களைச் செய்து வருகின்றோம்.
இச்சந்தர்ப்பங்களில் மாணவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் அநேக பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருகின்றார்கள்.
இந்த இடத்திலே ஆசிரியர்களுக்கு ஏற்படும் இழுக்குகளை நாங்கள் அனுமதிக்க முடியாது என்பதனால்தான் இத்தகைய முன்னாயத்த சட்ட அறிவூட்டல் விழிப்புணர்வுகளை நாங்கள் கிரமமாக நடத்தி வருகின்றோம்.
அந்த வகையில் பாடசாலை மட்டங்களிலே மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சமூக வலைத்தளங்களில் முகநூல்களிலும் பெரிதாக வெளிவருகின்றன.
எனவே தற்போதைய தொழினுட்ப அபிவிருத்தி யுகத்தில் நாம் விழிப்புணர்வுடன் இருந்து கடமையுணர்வோடு செயற்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வைப்பதே எமது நோக்கமாகும்.
எனவே, மனித உரிமைகள் பெண்கள் உரிமைகள் சிறுவர் உரிமைகள் மேம்பட்டிருக்கின்ற தற்போதைய காலகட்டத்தில் நாம் மிகவும் விழிப்பாக இருந்து சட்டத்தையும் நீதியையும் நிலை நாட்ட வேண்டும்.
அதே நேரம் எமது எதிர்காலத் தலைவர்களான மாணவ சமுதாயத்தை சிறந்த முறையில் பாதுகாத்து வழி நடத்தி வழிகாட்ட வேண்டும்.
மாணவர் சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டிய முழு முக்கிய பொறுப்பு ஆசிரியர் சமூகத்துக்கே உண்டு
எமது நடைமுறைச் சிக்கல்களை மணித உரிமைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் எவ்வாறு கையாளலாம் என்பது பற்றிய விழிப்புணர்களை ஆசிரியர்கள் பெற்றிருப்பது அவசியமாகும்.
0 Comments:
Post a Comment