மாவட்ட விளையாட்டு விழா மகளிருக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் ஏறாவூர்ப்பற்று செங்கலடி அணி சம்பியனாகத் தெரிவு.
46வது தேசிய விளையாட்டு விழாவுக்கு முன்னோடியாக நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா மகளிருக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவின் செங்கலடி மகளிர் அணி 12:5 என்ற ஸ்கோர் அடிப்படையில் வெற்றியீட்டிக் கொண்டு சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஞாயிறன்று 27.09.2020 இடம்பெற்ற இப்போட்யில் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவின் செங்கலடி மகளிர் அணியும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக அணியும் பங்குபற்றின.
இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய ஏறாவூர் மகளிர் அணியுடன் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் டி.சி.றொசைறோ பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் கே. சங்கீதா உட்பட நடுவர்களும் விளையாட்டு உத்தியோகத்தர்களும் காணப்படுகின்றனர்.
0 Comments:
Post a Comment