28 Sept 2020

திருகோணமலையில் தேவைப்படும் மக்களுக்கு செயற்கை கால்கள்.

SHARE


(குணா)

திருகோணமலையில் தேவைப்படும் மக்களுக்கு செயற்கை கால்கள்.

திருகோணமலையில் நடமாடும் செயற்கை கால்கள் உற்பத்தி முகாம் கொழும்பு கேபிடல் சிட்டி ரோட்டரி கழகம் மற்றும் திருகோணமலை ரோட்டரி கழகம் 2020 செப்டம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் திருகோணமலை நகர சபை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் கொழும்பு நண்பர்கள் நீட் சொசைட்டி -- Friend Need Society  (ஜெய்ப்பூர் கால்), ரோட்டரி கழகங்கள் மற்றும் இலங்கை ராணுவம் 22 பிரிவு ஆகியவை பங்கேற்றன.

COVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக  இந்த முகாம் முழங்காலுக்குக் கீழே கால்களை இழந்தவர்களுக்கு மட்டும்   சேவை செய்ய மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. முகாமில் 50 கால்களை இழந்தவர்கள் பங்கேற்றனர்.  மற்றும் 26 கால்களை இழந்தவர்கள் 27 செயற்கை கால்களைப் பெற்றனர் (ஒருவர் இரு கால்களுக்கும் ஒன்றுவீதம்) மீதமுள்ள செயற்கை கால்கள் கொழும்பில் தயாரிக்கப்பட்டு, திருகோணமலை ரோட்டரி கழகம் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

செப்டம்பர் 27 ஆம் தேதி செயற்கை கால்களை ஒப்படைக்கும் விழாவில் இலங்கை இராணுவம் 22 பிரிவு தளபதி, திருகோணமலை நகர சபைத் தலைவர், கொழும்பு கேபிடல் சிட்டி மற்றும் திருகோணமலையின் ரோட்டரி கழக அங்கத்தவர்கள், நண்பர்கள் நீட் சொசைட்டி உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் பங்கேற்றனர். நண்பர்கள் நீட் சொசைட்டியியன் மற்றும் ரோட்டரி கழக அங்கத்தவர்ளின் முயற்சிகளை பயனாளிகள் பாராட்டினர்கள்.











SHARE

Author: verified_user

0 Comments: