மட்டக்களப்பில் சோளன் பயிர் செய்கைபன்னும் விவசாயிகளின் விபரங்கள் விவசாய அமைச்சுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சோளன் பயிர் செய்கை பன்னும் விவசாயிகளின் விபரங்கள் மற்றும் அவற்றை செய்கைபன்னவுள்ள காணிகளையும் பிரதேச செயலகங்கள் வாயிலாக இனங்கண்டு மாவட்ட செயலாளர் திருமதி. கலாமதி பத்மராஜாவின் சிபாரிசுடன் விவசாய அமைச்சுக் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலில் புதிய அரசாங்கத்தின் உள்நாட்டு உணவு உற்பத்தி கொள்கைத் திட்டத்திற்கமைவாக நாடுபூறாகவும் ஒரு இலட்சத்தி 80 ஆயிரம் மெற்றிக்தொன் சோளன் உற்பத்தியினைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் இத்தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அரச காணிகள், மகாவலி திட்டத்திலான காணிகள் மற்றும் வன பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் இவ்வாறான சோளன் செய்கை மற்றும் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் காணிகளை விவசாயத்திற்கு முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் விவசா அமைச்சினால் இச்செயற்பாடு இடம்பெற்றுவருகின்றது.
இதேவேளை 2020-2021 காலப்பகுதிக்கான பெரும்போக நெற்செய்கைக்காக இம்மாவட்டத்தில் 67 ஆயிரத்தி 932.1 ஹெக்டேயல் வயல் நிலங்களிற்கான மணிய உரத்தினைப் பெற்றுக் கொடுக்கத் தேவையான முன்மெழிவினை மாவட்ட செயலகத்தினூடாக விவசாய அமைச்சின் தேசிய உரச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மறுவயல் பயிர்கள் செய்கை பண்ணப்படும் 4250 ஹெக்டேயர் நிலத்திற்கும், மறக்கறி மற்றும் பழவகை செய்கை பண்ணப்படும் 2177.85 ஹெக்டேயர் நிலத்திற்குமான உரத்தினைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உரச் செயலக உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜுதீன் மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் தகவல் தெரிவித்தார்.
இதுதவிர இம்முறை அரசாங்கத்தினால் சுகாதார உணவு மேம்பாட்டிற்காகவும், நஞ்சற்ற உணவுகளை பெற்றுக் கொள்வதற்கும், மண்வளத்தினைப் பாதுகாத்து சுற்றுச் சூழல் பாதுகாப்பினை உறுதி செய்யும் இலவசமாக வழங்கப்படும் மானிய உரம் இரசாயனப் பசளையுடன் சேர்த்து சேதனப் பசளையும் வழங்கப்படவுள்ளது. மேலும் அதற்கான ஊக்குவிப்புக்களும் விழப்பூட்டல் நடவடிக்கைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கடந்த சிறுபோகத்தின்போது நெற்செய்கைக்காக 8 ஆயிரத்தி 590.8 மெற்றிக்தொன் மானிய உரம் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் 5 ஏக்கருக்கு மேல் நெற்செய்கை பண்ணும் விவசாயிகளுக்கான 1000 ரூபா பெறுமதியான காசுப் பசளை 2177.85 மெற்றிக்தொன் தேசிய உரச் செயலக மாவட்டப் பிரிவினால் பெற்றுக் கொடுக்கப்பட்டது. இம்முறை மறுவயல் பயிர்களுக்கான காசுப் பசளை 1500 ரூபா என விவசாய அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்படத்தக்கது.
0 Comments:
Post a Comment