இடி மின்னலால் 27 பசுக்கள் இறப்பு இவ்வாறான இழப்பு இதுவே முதல் முறை என தகவல்.மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாவடியோடை பகுதியில் திடீரென ஏற்பட்ட பலத்த இடி மின்னலினால் தாக்கப்பட்டு ஒரு மாட்டுப் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 27 பசு மாடுகள் பலியாகியுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கள்கிழமை இரவு (31.08.2020) மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இடி மின்னல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
அவ்வேளையிலேயே இவ்வாறு மாட்டுப் பட்டி அமைந்திருந்த பகுதி இடி மின்னலால் தாக்கப்பட்டதில் 27 வெண்ணிற பசுக்கள் பலியாகியதாக மாட்டுப் பட்டி உரிமையாளர் தம்பியையா ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இது கேட்போருக்கு துயரத்தைக் கொடுத்து நிலைகுலையச் செய்ததாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பலியாகிய பசுக்களின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
உதவிக்கு விரைந்த அப்பகுதியிலுள்ள கடற்படையினர் இறந்த பசு மாடுகளை பெக்கோ இயந்திரத்தின் மூலம் நீண்ட அகழியைத் தோண்டி புதைத்து சூழலைப் பாதுகாத்தனர்.
0 Comments:
Post a Comment