வவுனதீவில் கொங்கிறீட் வீதிக்கான ஆரம்பகட்ட வேலையினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைத்தார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.
வவுனதீவில் கொங்கிறீட் வீதிக்கான ஆரம்பகட்ட வேலையினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை (18) தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழிற்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காயான்மடு கிராமசேவகர் பிரிவின் பிள்ளையார் கோயில் வீதியையே கொங்கிறிட் வீதியாக செப்பனிடுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளையே இராஜாங்க அமைச்சர் தொடங்கிவைத்தார்.
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் - 2020 ஆம் ஆண்டுக்கான இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 170 மீற்றருக்கான வீதியாக இவ்வீதி புணரமைக்கப்படவுள்ளது.
காயான்மடு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் க.தேவரூபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலைத் திட்டத்தை ஆரம்பித்துவைத்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக வவுனதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் உட்பட பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பொதுமக்களென பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment