ஏறாவூர் சந்தணமடு ஆற்றுப்பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு.ஒருவர் படுகாயம்
.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி சந்தணமடு ஆற்றுப்பகுதியில் இன்று வியாழக்கிழமை(20)காலை 5.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி சந்தணமடு ஆற்றுப்பகுதியில் இன்று வியாழக்கிழமை(20)காலை 5.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவது யாதெனில் குறித்தநபர் சித்தாண்டி-2இல் அமைந்துள்ள தனது வீட்டிலிருந்து சந்தணமடு ஆற்றுப்பகுதிக்கு தமது கால்நடைகளை பார்வையிடுவதற்காக காலை 5.00 மணியளவில் தனது நண்பருடன் புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு சென்ற குறித்த நபர்கள் காட்டுயானைகள் பல வருவதை அவதானித்துள்ளார்கள். யானையிரி டமிருந்து தங்களை பாதுகாக்க சற்று தமது பயணத்தை நிறுத்தி ஓரமாக ஒதுங்கியிருந்தார்கள். பின்னால் வந்த யானை ஒன்று இருவரையும் தாக்க முற்பட்டது. இதனை அவதானித்த இருவரும் யானையிரிடமிருந்து தப்பித்துக்கொண்டு அஞ்சி ஓடிப்போயுள்ளார்கள். பின்தொடர்ந் த காட்டுயானை பொன்னுத்துரை வசந்தகுமார்(வயது-52) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையை துரத்திப்பிடித்து குறித்த நபரை காலால் ஏறி மிதித்துள்ளது. பலமாக தாக்கப்பட்ட நபரை தனது நண்பரால் மீட்டெடுத்து மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதித்து அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிசிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள். அதன்பின் னர் சிசிச்சை பலன்றி குறித்தநபர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தி ல் குகதாசன் (வயது-35)என்பவரும் படுகாயமடைந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேதயறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள். மட்டக்களப்பில் விவசாயம், விலங்கு வேளாண்மை மேற்கொண்டு வருபவர்கள்,போக்குவரத்தில் ஈடுபடும் மக்களை தொடர்ச்சியாக தாக்கி வருகின்றது.இவ்வாறான நிலையில் காட்டு யானையிரிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க எல்லைப்பகுதியில் யானைவேலி,சரணாலயம் அமைக்குமாறு பாதிக்கப்படவர்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.
0 Comments:
Post a Comment