அரசாங்க உதவியளிப்பில் கிடைக்கும் வீட்டுத் திட்டத்தில் வீடு கட்டித் தருவதாகக் கூறி ஏழைப் பெண்ணிடம் பண மோசடி பொலிஸில் முறைப்பாடு.
இந்த மோசடிச் செயல்பற்றிய முறைப்பாடு சனிக்கிழமை 29.08.2020 ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் மிச்நகர் கிராமத்திலுள்ள கணவனை இழந்த அங்கவீனமான பெண்ணொருவருக்கு அழைப்பை ஏற்படுத்திய நபர் ஒருவர் அம்பாறை கச்சேரிக்கூடாக வீட்டுத்திட்டம் ஒன்று கிடைத்திருப்பதாகவும் அவ்வீட்டுத் திட்டத்தில் ஒரு வீட்டை உங்களது ஏழ்மை நிலைமை கருதி வழங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வீடு கிடைப்பதற்குத் தேவையான காணி உறுதி உட்பட சில ஆவணங்களையும் அதிகாரிகளுக்குக் கொடுப்பதற்காக ரூபாய் 20 ஆயிரத்தையும் எடுத்துக் கொண்டு அம்பாறை கச்சேரிக்கு வாருங்கள் என்று கூறியுள்ளார் அந்த ஆமாசடி நபர்.
இதனை நம்பிய மிச்நகர் கிராம வாசியான அந்தப் பெண்ணும் அவரது சகொதரனும் தலா 20 ஆயிரம் ரூபாவையும் காணி உறுதி உட்பட ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு அம்பாறைக் கச்சேரிக்குச் சென்று அங்கு தன்னைத்; தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபரைச் சந்தித்து பணத்தைக் கையளித்துள்ளனர்.
இதேபோன்று அப்பெண்ணின் சகோதரனிடமும் அந்நபர் பணம் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். கடந்த வாரம் புதன்கிழமை இவ்வாறு அந்நபர் பணத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவரது தொலைபேசி செயலிழந்துள்ளதாகத் தெரிவித்த ஏமாற்றப்பட்ட பெண்ணும் பெண்ணின் சகோதரனும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டைப் பதிவு செய்து கொண்ட ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம்பற்றிய மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment