நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மட்டக்களப்பு வாவிககரை வீதியில் அமைந்துள்ள அவர்களது கட்சி அலுவலகத்தில் இரத்ததான நிகழ்வு செவ்வாக்கிழமை (18) இடம்பெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள், என ஏராளமானோர் இதன்போது கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைத்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு இதன்போது இரத்த நன்கொடையாளர்களிடமிருந்து இரத்த வகைகைப் பெற்றுக் கொண்டது.
0 Comments:
Post a Comment