7 Aug 2020

கிழக்கு தமிழ் மக்களின் நலன்கருதி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் - பிரசாந்தன்

SHARE

தமிழ் மக்களின் இருப்பினை பாதுகாப்பதற்காகவும் அபிவிருத்திகளை செய்வதற்காகவும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டகளப்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு தமிழ் மக்களின் நலன்கருதி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் என இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அமோக வெற்றியீட்டியதை தொடர்ந்தே அவர் இதனை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: