வரலாற்றுச் சிறப்புப் பெற்ற சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின்.
நான்காம் நாள் அத்தியாகுடித் திருவிழா உற்சவகாரர்களின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
விநாயகப் பெருமானின் சதுஸ்டி நாளாகிய தினம் விநாயகப் பெருமானுக்கு
விசேட பூசை இடம்பெற்றதுடன் கொடித்தம்ப சிறப்பு பூசை இடம்பெற்றது.
பின்னர் வசந்த மண்டப பூசை இடம்பெற்றதும் எம்பெருமான் முருகப் பெருமான் எளுந்தருளி உள்வீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அத்தியாகுடி உற்சவகாரர்களினால் வருடாந்தம் சங்காபிசேக விசேட பூசை இடம்பெறுகின்றமை வழமை, நாட்டில் ஏற்பட்டிருக்கும் வைரஸ் தாக்கம் காரணமாக இம்முறை 1008 சங்காபிசேக விசேட பூசை இடம்பெறவில்லை.
அத்தியாகுடி உற்சவகாரர்களினால் இடம்பெற்ற நான்காம் திருவிழாவாகிய இன்றைய உற்சவகால பூசை வழிபாட்டுக்கு வருகைதந்த பக்தர்கள் அனைவரும் சுகாதார நடைமுறையைக் கடைப்பிடித்து இன்றைய உற்சவகால பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் கொடியேற்றமானது சென்ற 18ம் திகதி கொடியேற்ற மகோற்சவம் ஆரம்பமாகியது.
ஆலயத்தின் மகோற்சவத்தின் தீர்த்தோற்சவமானது எதிர்வரும் 2ம் திகதி உதயன்மூலையில் அமையப்பெற்ற பிரணவ தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment