வரலாற்று சிறப்புப் பெற்ற சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் மகோற்வப் பெருவிழா எதிர்வரும் வரை 18ம் திகதி செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றைய தினம் ஆலய நிருவாகம் மற்றும் குடித்திருவிழா குழுத் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஆலய நிருவாக மண்டபத்தில்.
ஆலயத்தின் வன்னிமை சிவவடிவேல் பாலச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.ஆலயத்தின் கொடியேற்றம் எதிர்வரும் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன் எதிர்வரும் 02ம் திகதி புதன்கிழமை பிரணவத் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய திருவருள்கூடியிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரனா-19 வைரஸ் தாக்கம் காரணமாக இம்முறை ஆலய மகோற்வம் கொடியேற்றத் திருவிழா தொடக்கம் தீர்த்தோற்வம் வரைக்குமான சுகாதரா நடைமுறையை கடைப்பிடித்து ஆலயத்தின் உற்சவத்தை நடத்திச் செல்வது தொட்பாக விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டதுடன்சுகாதார நடைமுறைக்கு அமைய ஒவ்வொரு குடித் திருவிழா உற்சவகாரர்களும் ஏற்றுக்கொண்டதுடன் ஆலய திருவிழாவை முறையாக நடைத்துச் செல்வதற்கு தீர்மானங்கள் எட்டப்பட்டது.
ஆலயத் திருவிழா காலங்களில் சுகாதார நடைமுறையைக் கருத்தில்கொண்டு திருவிழா உற்சவகாலங்கள் மற்றும் ஏனைய விடயதானங்களிலும் ஆலய நிருவாகம் மற்றும் குடிமக்கள் இணைந்து சில மாற்றங்களை மேற்கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக இம்முறை உற்சவ காலங்களில் கொடியேற்ற திருவிழா நாட்கள் தொடக்கம் தீர்த்தோற்சவம் வரையான காலப்பகுதியில் சித்தாண்டி முருகன் அன்னதான சபையினால் அன்னதானம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இம்முறைமாற்றங்கள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்குவது நிறுத்தப்பட்டு இருக்கின்றது.
அதுபோன்று கடைகள் மற்றும் நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்ற விடயதானங்களை இம்முறை தவிர்த்து ஆலயத்தின் உற்சவத்தினை சுகாதார
முறைமையைக் கடைப்பிடித்து நடத்த அனைவரும் தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எம்பெருமானர் சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலய உற்சவ காலங்களில் வருகின்ற பக்தர்கள் அனைவரும் சுகாதார நடைமுறையைக் கடைப்பிடித்து குறைந்தபட்ச நேரத்தை ஆலய வழிபாட்டிற்காக ஒதுக்கி வழிபாடுகளில் ஈடுபடவேண்டும் அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆலயத்தின் நிருவாக கடமைகளுக்காக உற்சவகாரர்கள் வரவு அமையவேண்டுமெனவும் தீர்மானங்கள் எட்டப்பட்டு நன்றியுரையுடன் ஆலய உற்சவகால நிருவாக சபைக்கூட்டம் நிறைவடைந்தது.
0 Comments:
Post a Comment