என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அழைப்பு விடுத்துள்ளார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள அவர்களது கட்சி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார். இதன்போது அவர் மேதும் தெரிவத்துள்ளதாவது…
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒரு பாரிய செய்தியினை வெளிப்படுத்தியிருக்கின்றது. கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பல வேதனைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்கள் 2015 தொடக்கம் அபிவிருதியிலும், தனித்துவத்திலும் மிகவும் மோசமாகப் பின்னடைவை எதிர்நோக்கியிருக்கின்றார்கள். எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படல் வேண்டும் அதேபோல் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடந்த தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்hர்கள். இதனை எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சிரேமற்று எமது தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் முன்னெடுத்துச் செல்வோம் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான வாக்குகளை வழங்கி இம்முறை 4 நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்துள்ளார்கள். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஒவ்வாருவரும் ஒவ்வொரு அரசியற் கட்சி சாரந்தவர்களாக இருந்தாலும், ஒவ்வொரு கட்சிக் கொள்கை சார்ந்தவர்களாக இருந்தாலும், அரசியல் என்பது மக்களுக்காகவே தவிர தங்களுக்காகவோ, தாங்கள் சார்ந்த கட்சிக்காகவோ அல்ல என்பதைப் புரிந்து கொண்டு, மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டடிருக்கின்ற அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒரே கூரையின் கீழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான களத்தினை எமது கட்சி அமைத்துக் கொண்டுக்கும் என்ற அடிப்படையில், புதிய நாடாளுமன்றத் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருக்கின்ற புதிய நாடாளுமன்ற அமர்வில் எமது கட்சித்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.சந்திரகாந்தன் அந்த அமர்வில் கலந்து கொள்வார்.
எனவே மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 4 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதபோல் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கின்ற வகையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்து பயணிப்பதற்கு நாம் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வசமிருந்த கிழக்கு மாகாணசபை மீண்டும் தமிழர்களின் வசம் வரவேண்டும் என்பதில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள். ஆனால் அம்பாறை மாவட்டதிலும், திருகோணமலை மாட்டத்திலும், தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கில், எமது கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் போட்டியிட்டிருந்தது. ஆனாலும் திருகோணமலை மற்றும், அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களை நாங்கள் என்றும் நடுக்கடலில் விடுவதற்கு எமது கட்சி தயாராக இல்லை. ஏனெனில் அவர்கள் அரசியல் அனாதைகளாக நடுத் தெரிவில் விடப்பட்டது போன்று பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே அம்பாறை மாவட்டத்திற்கும், திருகோணமலை மாவட்டத்திற்கும், எமது கட்சி அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றது. இந்நிலையில் எமது கட்சி எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை, மட்டக்களப்பு, மற்றும் அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடும். இந்நிலையில் தமிழர்கள் நிருவகித்த கிழக்கு மாகாண சபையை மீண்டும் பொறுப்பேற்று செயற்படுத்துவதற்கு எமது தமிழ் மக்கள் விடதலைப் புலிகள் கட்சி தயாராக இருக்கின்றது.
மத்திய அரசாங்கத்துடன் ஒரு இணக்க அரசியல் செய்தவர்கள் நாங்கள் என்ற வகையில் மத்தியில் ஆட்சி அமைத்திருக்கின்ற ஜனாதிபதி கோட்பாய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருடன் இணக்க ஆட்சி நடாத்திய நட்பு இருக்கின்றது. அவர்களும் எம்முடன் கலந்துரையாடியுள்ளார்கள். எமது கட்சித் தலைவருக்கு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் மிக விரைவில் இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும். புதன்கிழமை (12) அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன இந்நிலையில் எமது தலைவர் தடுப்புக் காவலில் இருப்பதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமை என்கின்ற அடிப்படையில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமைர்வுக்குரிய நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது. அவர் நாடாளுமன்றம் சென்றபின்பே ஏனை நடைமுறைகள் முன்னெடுக்கப்படும். என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment