மட்டக்களப்பில் 2020-2021 பெரும்போக நெற்செய்கை பண்ணப்படவுள்ள 67,932 ஹெக்டேயர் வயல்காணிக்காண மானிய உரும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை.மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020-2021 கலப்பகுதிக்கான பெரும்போக நெற்செய்கை பண்ணப்படவுள்ள 67 ஆயிரத்தி 932.1 ஹெக்டேயல் வயல் நிலங்களிற்கான மணிய உரத்தினைப் பெற்றுக் கொடுக்கத் தேவையான முன்மெழிவினை விவசாய அமைச்சின் தேசிய உரச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
மாவட்ட உர ஒருங்கிணைப்புக குழுக் கூட்டம் தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜுதீனின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் நேற்று (18) இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையில் அரசாங்க அதிபர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் இம்முறை அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானிய உரம் இரசாயனப் பசளையுடன் சேர்த்து சேதனப் பசளையும் வழங்கப்படவுள்ளதாகவும், சுகாதார உணவு மேம்பாட்டிற்காகவும், நஞ்சற்ற உணவுகளை பெற்றுக் கொள்வதற்கும், மண்வளத்தினைப் பாதுகாத்து சுற்றுச் சூழல் பாதுகாப்பினை உறுதி செய்யும் முகமாக ஒருங்கினைந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக சேதனப் பசளையினைப் பயன்படுத்த விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் அவர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளைக் கேடடுக் கொண்டார்.
இதேவேளை கடந்த பெரும்போகத்தின்போது மட்டக்களப்பில் நெற்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான காப்புறுதித் தொகை நட்டஈடாக சுமார் 301 மில்லியன் ரூபா வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் 90 வீதமான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுதவிர இம்முறை பெரும்போகத்தில் நெற்செய்கை பண்ணப்படும் நெற்காணிகளில் சுமார் 750 ஹெக்டேயர் நிலத்தில் நெல் தவிர்ந்த மாற்றுப் பயிர்களான உழுந்து, சோளம், நிலக்கடலை மற்றும் எள்ளு போன்ற பயிர்கள் செய்கை பன்னுவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் சம்மந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இம் மாவட்ட உர ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீPகாந்த், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் கே. ஜெகன்னாத், விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் வீ. பேரின்பராஜா, விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஆர். சிவனேசன், விவசாய காப்புறுதி சபையின் உதவிப் பணிப்பாளர் எம். பாஸ்கரன், நீர்பாசன திணைக்கள திட்ட முகாமையாளர்கள், கமநல பெரும்பாக உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளென பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
0 Comments:
Post a Comment