இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்கள் திறப்பு அறிவுறுத்தல் தொடர்பில் யாழ். வர்த்தகர்கள் குழப்பமடைய தேவையில்லையென, யாழ்ப்பாண வணிகர் சங்க உபதலைவர் ஆர். ஜெயசேகரன் தெரிவித்தார்.நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பும் முகமாகவும் நாட்டை மீள வழமைக்கு கொண்டுவருவதற்குமே, இந்த அறிவுறுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளதெனவும், இந்த அறிவுறுத்தல் இலங்கையின் சகல பாகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதெனவும், அவர் கூறினார்.
உங்களால் இயலுமாக இருந்தால், இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென்றார்.(tx:tmn)
0 Comments:
Post a Comment