7 Jul 2020

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன மத பேதம் கடந்த சிரமதானம்.

SHARE
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன மத பேதம் கடந்த சிரமதானம்.
இந்து மக்கள் வழிபடும் பிரபல வழிபாட்டுத் தலமான மட்டக்களப்பு - மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை 07.07.2020 மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த சிரமதானப் பணிகளில் மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும் அனைத்து இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களும் இன மத பேதம் கடந்து ஈடுபட்டார்கள்.

வருடம் தோறும் மட்டக்களப்பு மாநகர சபையினால் மாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவ காலத்திற்கு முன்பதாக மேற்கொண்டுவரும்  சிரமதானப் பணி இம்முறையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவனின் தலைமையில் ஆரம்பமான இந்த சிரமதானப் பணியின் மூலம் ஆலய வளாகம் முழுவதுமாக தூய்மையாக்கல் இடம்பெற்றது.

மாநகர சுகாதாரப் பிரிவுத் தலைவர் சிவம் பாக்கியநாதன் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த சிரமதானப் பணியில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் பங்கெடுத்தனர்.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன், ஆணையாளர் கே.சித்திரவேல், பிரதி ஆணையாளர் யூ.சிவராஜா மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மேற்பார்வை செய்தனர்.

மட்டக்களப்பு பேராலயங்களில் ஒன்றான மாமாங்கேஸ்வரர் ஆலய திருவிழாக்கள் எதிர்வருகின்ற சனிக்கிழமை 11.07.2020 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 20 ஆம் திகதி தீத்தோற்சவத்துடன் நிறவு பெறவுள்ளது.

இம்முறை ஆலய திருவிழாக்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூ+ழ்நிலை காரணமாக 50 பேர் மாத்திரம் பங்குகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












SHARE

Author: verified_user

0 Comments: