26 Jul 2020

“அவளுக்கு ஒரு வாக்கு” மட்டக்களப்பில் பெண்களை அங்கிகரிக்கக் கோரி விழிப்புணர்வு.

SHARE
“அவளுக்கு ஒரு வாக்கு” மட்டக்களப்பில் பெண்களை அங்கிகரிக்கக் கோரி விழிப்புணர்வு.
இம்முறை இடம்பெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களையும் கருத்திற் கொண்டு அவர்களையும் அரசியல் அதிகாரத்திற்குள் உள்வாங்குமாறு கோரும் “அவளுக்கு ஒரு வாக்கு”  விழிப்புணர்வு நிகழ்வுகள் மட்டக்களப்பு நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்புடன்  (WCDM இளம்பெண் செயற்பாட்டாளர்கள் குழுவும் (RPC இணைந்து இந்த விழிப்புணர்pவு நிகழ்வை சனிக்கிழமை 25.07.2020 மட்டக்களப்பு பிரதான பேரூந்து நிலையத்தில் நடத்தின.

இதில் மக்களை விழிப்புணர்வூட்டும் தெரு நாடகம் இடம்பெற்றது.

எதிர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சிறந்த பெண் வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும், பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும், பெண் வேட்பாளருக்கு ஆண்களும் இணைத்து வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் போன்ற கருத்துக்களை உள்வாங்கியவாறு இந்த தெரு நாடகம் நிகழ்த்தப்பட்டது.

விரும்பிய கட்சிக்கு வாக்களிப்பதுடன், அக் கட்சியில் உள்ள பெண் வேட்பாளருக்கு கட்டாயம் தெரிவு வாக்கினை அளித்து பெண் சமத்துவம் பேண வழிவகுக்க வேண்டும் எனவும் தெரு நாடகத்தின் வாயிலாக அறைகூவல் விடுக்கப்பட்டது.

இதுவரை காலமும் மட்டக்களப்பில் இருந்து இரண்டு பெண் வேட்பாளர்கள் மாத்திரம் நாடாளுமன்றம் சென்றிருக்கின்றனர். இம்முறை 304 வேட்பாளர்களில் 26 வேட்பாளர்கள் மாத்திரம் பெண் வேட்பாளர்கள்.

இது மொத்த வேட்பாளர் விகிதத்தில் 8 சதவீதம் மாத்திரமே, இந்த 26 பெண் வேட்பாளர்களில் ஒருவராகிலும் நாடாளுமன்றம் செல்ல வைப்பது எமது அனைவரினதும் கடமையாகும் என்றும் அங்கு வலியுறுத்தப்பட்டது.

மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பெண்களுக்கென சமவுரிமை விடயங்களை உள்ளடக்கியவாறு தேர்தல் விஞ்ஞாபனம்  உருவாக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான ரட்ணஜீவன் ஹ_ல்,  ரீ.ஹென்ஸ்மன்  ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தேர்தல்கள்  ஆணைக்குவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹ_ல், தேர்தல்கள் உதவி ஆணையாளர் ரீ.ஹென்ஸ்மன் ஆகியோரிடம் கையளிப்பட்டது.







SHARE

Author: verified_user

0 Comments: