22 Jul 2020

கிராமப் புறங்களிலுள்ள மக்கள் மாற்றி உடுப்பதற்குக்குகூட உடுதுணிகள் இல்லாதவர்கள் பலர் உள்ளார்கள் - வேட்பாளர் தவஞானசூரியம்.

SHARE
கிராமப் புறங்களிலுள்ள மக்கள் மாற்றி உடுப்பதற்குக்குகூட உடுதுணிகள் இல்லாதவர்கள் பலர் உள்ளார்கள் - வேட்பாளர் தவஞானசூரியம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராமப் புறங்களிலுள்ள மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். மாற்றி உடுப்பதற்குக்குகூட உடுதுணிகள் இல்லாத மக்கள் பலர் உள்ளார்கள். அந்த மக்கள் எம்மை அன்போடு வரவேற்று எம்மிடம் அவர்களின் குறைகளைத் தெரிவிக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அறுதிப் பெரும்பான்மையாக எம்மை வெற்றியடையச் செய்வார்கள் என நாங்கள் நம்புகின்றோம்.

என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரான இ.தவஞானசூரியம் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் செவ்வாய்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..

மக்கள் சேவகனாக மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்குத் சேவை செய்வதற்காகத்தான் நான் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியிருக்கின்றேன். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பொருளாதார ரீதியில் சகல வளங்களும் பெற்று நிறைவான இலெட்சாதிபதிகாளாக நல்ல உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதுதான் எனது நோக்கம்.

மட்டக்களப்பு மாவட்டம் சகல துறைகளிலும் அபிவிருத்திகாண வேண்டும், அதற்காக வேண்டி, பசுமைப் புரட்சித்திட்டம், உற்பத்தி திறன்திட்டம், உள்ளிட்ட பல திட்டங்களை வகுத்துள்ளேன். அதற்காக வேண்டி இம்மாவட்டத்தில் 20000 மெற்றிக்தொண் எள் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம். அதன்மூலம் 3500 கோடி ரூபா இம்மாவட்டத்திற்கு வருமானமாகக் கிடைக்கும். நான் மக்களின் சேவகனாக துறைநீலாவணை தொடக்கம், வெருகல் ஆறு மற்றும், குடும்பிமலை வரைக்கும், கிட்டத்தட்ட 900 கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள மக்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்துள்ளோம். மக்களின் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுவருவதுதான் எமது நோக்கமாகும். இதற்காகவேண்டி அரசாங்கமும் எமது ஜனாதிதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களும் முன்னுரிமை வழங்கி, செயற்படுவார்கள் என்ற சமிக்ஞையை எமக்கு வழங்கியுள்ளார்கள்.  

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அனைவரிடமும் சென்று இம்மாவட்டத்தில் அமைச்சர் ஒருவரை உருவாக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்து வருகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரசாங்க்தினால்  அபிவிருத்திக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி இம்முறை இம்மாவட்டத்தில் அமைச்சுப் பதவி பெறுகின்றவர் தமிழர்களின் ஊடகாக வழங்கப்பட வேண்டும், எனவும்,  அதனூடாக மட்டக்களப்பு மாவட்டம் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், நான் ஒரு சமூக சேவகன் என்ற ரீதியில் நான் மக்களுடன் பேசி வருகின்றேன். இதனால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் எமது வெற்றியை நூறு வீதம் உறுதிப்படுத்தியுள்ளார்கள். 

கடந்த காலங்களிலிருந்த அரசியல்வாதிகளால் தாங்கள் எதுவித பயனும் அடையவில்லை எனவும், எதுவித அபிவிருத்திகளும் நடைபெறவில்லை எனவும், மக்கள் எம்மிடம் மிகுந்த மனவேதனையுடன் தெரிவிக்கின்றார்கள். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராமப் புறங்களிலுள்ள மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். மாற்றி உடுப்பதற்குக்குகூட உடுதுணிகள் இல்லாத மக்கள் பலர் உள்ளார்கள். அந்த மக்கள் எம்மை அன்போடு வரவேற்று எம்மிடம் அவர்களின் குறைகளைத் தெரிவிக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அறுதிப் பெரும்பான்மையாக எம்மை வெற்றியடையச் செய்வார்கள் என நாங்கள் நம்புகின்றோம். 

எமது வெற்றியின் பின்னர் பாலங்களை புணரமைத்தல், விளைபொருட்களை அரசாங்கத்தினூடாக கொள்வனவு செய்து ஏற்றுமதி செய்தல், குளங்களைப் புணரமைத்தல், ஏற்றுமதி வலயங்களை அமைத்தல், படுவாங்கரைப் பகுதியையும், எழுவாங்கரையையும் இணைக்கும் மண்டூர் - குருமண்வெளி ஓடதுரைக்குப் பாலம் அமைத்தல், வீடுகளை அமைத்தல், மலசலகூடம் அமைத்தல், சிறு தொழிற்பேட்டைகளை உருவாக்குதல்,  உள்ளிட்ட பல விடையங்கை மேற்கொள்;ளோம் என அவர் இதனபோது அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: