26 Jul 2020

நாங்கள் காலகாலமாக வடக்கும்,கிழக்கும் இணைந்திருக்க வேண்டும் எனும் நல்லெண்ணத்துடன் இன்றுவரையும் வாழ்ந்திருக்கின்றோம் - கிருஸ்ணபிள்ளை.

SHARE
நாங்கள் காலகாலமாக வடக்கும்,கிழக்கும் இணைந்திருக்க வேண்டும் எனும் நல்லெண்ணத்துடன் இன்றுவரையும் வாழ்ந்திருக்கின்றோம் - கிருஸ்ணபிள்ளை.
வடக்குத் தலைமைத்துவம் வடக்கை வாழ வைத்திருக்கின்றார்களே தவிர கிழக்கை வாழ வைத்த வரலாறாக இன்றுவரையும் தெரியவில்லை. அந்த அடிப்படையில் தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குகளை பெறுவதற்காக தமிழ் தலைமைகள்  வடக்கும், கிழக்கும் இணைந்திருக்க வேண்டும் என்று போலிப்பிரச்சாரங்களை தமிழ்மக்களிடம் கூறி வருகின்றார்கள் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வேட்பாளர் ஞானமுத்து கிருஸ்ணப்பிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (26) இவ்விடையம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

நாங்கள் காலகாலமாக வடக்கும்,கிழக்கும் இணைந்திருக்க வேண்டும் எனும் நல்லெண்ணத்துடன் இன்றுவரையும் வாழ்ந்திருக்கின்றோம். வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் வடக்குத் தலைமைத்துவம் வடக்கை வாழ வைத்திருக்கின்றார்களே தவிர கிழக்கை வாழ வைத்த வரலாறாக இன்று வரையும் தெரியவில்லை.அந்த அடிப்படையில் தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குகளை பெறுவதற்காக தமிழ் தலைமைகள்  வடக்கும், கிழக்கும் இணைந்திருக்க வேண்டும் என்று போலிப்பிரச்சாரங்களை தமிழ்மக்களிடம் கூறி வருகின்றார்கள். இதனை தமிழ்மக்கள் எப்போதே பொய்யென்று உணர்ந்து விட்டார்கள்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் வடக்கிற்கு என்று ஒரு தமிழ் ஆளுநர், வடக்கிற்கு  என்று அபிவிருத்தி அமைச்சரை பெற்றுக்கொண்டு அவ்அமைச்சின் மூலம் 15,000 கோடி முதலாவது பயணம்,இரண்டாவது பயணம் நம்பிக்கையில்லாப் பிரரேணைக்கு கையுயர்த்தி 15,000 கோடியை பெற்றுக் கொண்டு வடக்கை தமிழ் தலைமைகள்  வாழ வைத்துள்ளார்களே தவிர கிழக்கை மாற்றுத் தலைமைகளிடம் கையளித்து விட்டார்கள். வடக்கை வாழ வைத்தால் மட்டும் எனும் நிலைப்பாட்டில் இருக்கும் தமிழ் தலைமைகள் ஏன் கிழக்கிற்கு ஒரு அபிவிருத்தி அமைச்சரை தமிழ் தலைமைகள் நியமிக்க முடியாமல் போனது என்பது கிழக்கில் தமிழ்மக்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். கிழக்கிற்கு என்று ஒரு அபிவிருத்தி அமைச்சரும் இல்லை, அபிவிருத்தியும் இல்லாமல் இருப்பதுதான் வடக்கு தமிழ் தலைமைகளின் அரசியல் வங்குரோத்தை எடுத்துக் காட்டியுள்ளது. இது போன்று  வடக்குத் தலைமைகளால் நூற்றுக்கு மேற்பட்ட விடயங்கள் கிழக்கில் புறக்கணிக்கப்பட்டிருகின்றது.

யுத்தம் வந்தது, வெள்ளம் வந்தது, சுனாமி வந்தது.வடக்கில் பாதிக்கப்பட்ட பிரதேசத்தையும், மக்களையும் பார்வையிடுவதற்காக வந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை வடக்குத் தமிழ் தலைமைகள் வடக்கை மட்டும் காட்டினார்களே தவிர நவநீதம்பிள்ளையை கிழக்கிற்கு ஏன் அழைத்து வந்து காட்டவில்லை என்பது கிழக்கு மாகாணம் எமக்கு தேவையில்லை என்பதுதான் வடக்கு தமிழ்தலைமைகளின் இராஜதந்திர அரசியல் வியூகமாகும். இதனை கிழக்குத் தமிழ்மக்கள் 2008ஆம் ஆண்டு முதல் உணர்ந்து விட்டார்கள்.

2008ஆம் ஆண்டு முதல் நாங்கள் ஏமாறி விட்டோம், இனியும் ஏமாறக்கூடாது என்று உணர்ந்த கிழக்குத் தமிழ்மக்கள் நல்ல நோக்கோடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பலப்படுத்தி பரிணாமமிக்க கட்சியாக மறுமலர்ச்சி அடைந்துள்ளது. வடக்கிற்கும், கிழக்கிற்கும் என இரு தலைவர்களை உருவாக்கி அதனூடாக வடக்கிற்கும், கிழக்கிற்குரிய இருதலைவர்களும்  இணைந்து பேசித்தீர்மானித்து பொது விடயங்களில் ஒன்றாக பயணிப்போம். அதைவிடுத்து வடக்குத் தலைமை கிழக்கை ஆள்வதற்கு கிழக்கு மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். மட்டக்களப்பை மட்டக்களப்பான் ஆழவேண்டும். மட்டக்களப்பையையோ அல்லது கிழக்கையையோ வடக்குத் தலைமைத்துவம் ஆழ முற்படுவது கிழக்குத் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்போது கிழக்கின் நில, நிருவாக, இருப்பு, அபிவிருத்தி எல்லாம் பறிக்கப்பட்டுள்ளது. தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால்  பெற்றுத்தராத தேசியம், சமஸ்டி, இனப்பிரச்சனைக்கான தீர்வை வடக்குத் தலைமைகள் பெற்றுத்தர முடியாது. வடக்கின் நிலவரம் வேறு. கிழக்கின் நிலவரம் வேறு. கிழக்கை மீட்பதற்கு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு மட்டும் முடியும். அதற்காக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆணை வழங்குங்கள் எனத்தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: