26 Jun 2020

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைகளுக்கு வேள்ட் விஷன் நிறுவனத்தினால் கைகளை சுத்தம் செய்யும் பொருட்கள் வழங்கிவைப்பு

SHARE
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைகளுக்கு வேள்ட் விஷன் நிறுவனத்தினால் கைகளை சுத்தம் செய்யும்  பொருட்கள் வழங்கிவைப்பு.
எதிர்வரும் 29ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைகளுக்கு வேள்ட் விஷன் (உலக தரிசனம்) நிறுவனத்தினால் ஒரு தொகுதி கைகளை சுத்தம் செய்யும் பொருட்டு அதற்கான பொருட்கள்  வலயக்கல்வி அலுவலகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (26) வழங்கிவைக்கப்பட்டது.


மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வேள்ட் விஷன் (உலக தரிசனம்) நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 29ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களின் சுகாதார பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் வேள்ட் விஷன் நிறுவனத்தினால் இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.




SHARE

Author: verified_user

0 Comments: