ஆரையம்பதியில் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கிவைப்பு.
மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முதியோர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு ஆரையம்பதி விதாதா வள நிலையத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு லியோ கழகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றது, அந்த வகையில் மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கண் பார்வை குறைபாடுள்ளவர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக கிழக்கு பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்துடன் மட்டக்களப்பு லியோ கழகம் இணைந்து மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முதியோர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான கண் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கான இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு லியோ கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் கலந்துகொண்டு இலவச மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்தார்.
0 Comments:
Post a Comment