மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான மாதிரி தேர்தல் வாக்கெடுப்பு, ஞாயிற்றுக்கிழமை (14) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் மகா வித்தியாலயத்தில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணிவரை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான திருமதி.கலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன், மற்றும் அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் அணiயாளர், அம்பாறை மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் போன்றோரின், நேரடி நெறிப்படுத்தலின் கீழ் இந்த மாத்திரி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்குரிய பொலிஸ் உயர் அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 300 பேர் இதக்போது வாக்களிப்பதற்கு அழைக்கப்பட்டிருந்தனர். வாக்காளர்கள், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளிகளைக் கடைப்பிடித்து இதன்போது சுமுகமான முறையில் வாக்களிப்பில் கலந்து கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.
வீடியோவை பார்வையிடுபவர்கள் தயவு செய்து அதனை subscribed செய்து விடுங்கள்.
வீடியோவை பார்வையிடுபவர்கள் தயவு செய்து அதனை subscribed செய்து விடுங்கள்.
0 Comments:
Post a Comment