(சுதா)
தமிழர் ஆசிரியர் சங்கத்தினால் முகக்கவசங்கள் அன்பளிப்பு.கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வலயக் கல்வி அலுவலகங்களுக்கு ஒரு தொகுதி முகக்கவசங்கள் தமிழர் ஆசிரியர் சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சிரேஷ்ட துணைப் பொதுச் செயலாளர் சி.சசிதரன், பொருளாளர் எஸ்.வரதராஜன் மற்றும் மட்டு மாவட்ட செயலாளர் சிவநடேஸ்,மட்டு மாவட்டத் தலைவர் உட்பட தமிழர்ஆசிரியர் சங்க முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment