18 May 2020

துறைநீலாவணை தோம்புதோர் வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு

SHARE
( இ.சுதா)

துறைநீலாவணை தோம்புதோர் வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு.
சப்ரிகம திட்டத்தின் கீழ் துறைநீலாவணை 7 ஆம் வட்டார தோம்புதோர் வீதி புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா இருபது இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் துறைநீலாவணை 7 ஆம் வட்டார தோம்புதோர் வீதி புனரமைப்புக்கான ஆரம்ப நிகழ்வு திங்கட்கிழமை (18) முன்னாள் கிராமோதயத் தலைவர் த.யோகராசா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.சா.வியாழேந்திரன் மற்றும், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் எனப்பலரும் கலந்து இதன்போது கொண்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: