தற்போது எழுந்துள்ள கொவிட் - 19 எனப்படும் கொரோனா எனும் புதிய வகை வைரஸின் தாத்தகத்தினால் பண்டிகைகள், மற்றும் விழாக்கள் எனபனவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
வழக்கமாக வெசாக் பண்டிகைக் காலத்தில் பிரமண்டமான முறையில் களுவாஞ்சிகுடி பெலிசார், மற்றும் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினால் மின்விளக்குகளால் அலங்கரித்து, வெசாக்கூடுகள் தொங்கவிடப்பட்டு, மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பணயம் செய்யும் பிரயாணிகளுக்கும், வெசாக்கூடுகளைப் பார்வையிட வரும் மக்களுக்கும், தாகசாந்திகள் வழங்குவது வழக்கமாகும்.
ஆனால் இவ்வருடம் தற்போதைய கொரோனா அச்சத்தின் காரணமாக அச்செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டு, பௌத்த கொடிகள், மற்று, வெசாக்கூடுகள், மின்விளக்குகள், என்பன மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தொங்கவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது,
0 Comments:
Post a Comment