16 May 2020

மட்டக்களப்பில் கிணறுகள் வற்றின மக்கள் நள்ளிரவில் வெளியேறினர்.

SHARE
மட்டக்களப்பில் கிணறுகள் வற்றின மக்கள் நள்ளிரவில் வெளியேறினர்.
மட்டக்களப்பு மாவட்டம் கிராங்குளம், குருக்கள்மடம், களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், கேட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு, உள்ளிட்ட பல பகுதிகளிலும் கிணற்று நீர் வற்றுவதாகத் தெரிவித்து ஏதும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடலாமோ என்ற அச்சத்தின் காரணமாக வெள்ளிக்கிழமை (15) நள்ளிரவு முதல் கடற்கரை ஓரமாக வசித்து வந்த மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி கிராமங்களின் நடுப்பகுதிக்கு வந்து வீதிகளில் குவிந்துள்ளனர். பின்னர் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் வெள்ளிக்கிழமை இரவைக் கழித்த அவர்கள் சனிக்கிழமை (16) காலை தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

கிராமங்களிலுள்ள குடி நீர் கிணறுகள் சடுதியாக வற்றியுள்ளதாக மக்கள் அவதானித்துள்ளனர் இதன் காரணமாக மக்கள் பீதியடைந்து வெளியேறியுள்ளனர். 

இந்நிலையில் மட்டக்களப்பில் சுனாமி வருவதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை, மக்கள் அச்சமடைய தேவையில்லை. வந்திகளை நம்ப வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரிவித்துள்ளார்.

கல்லாறு, ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, பகுதியில் கிணற்று நீர் மட்டம் வெள்ளிக்கிழமை இரவு வற்றிபோயுள்ளது. இதனையடுத்து மக்கள் சுனாமி போன்ற அனர்த்தம் ஏற்படப் போகின்றது என அச்சம் கொண்டு தமது வீடுகளை விட்டு வெளியேறியதையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட கரையோரத்திலுள்ள பல பகுதிகளில் இருந்து மக்கள் அச்சத்தினால் வீடுகளை விட்டு வெளியேறியுள்னர்.

தற்போது காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீர் மட்டம் குறையும்போது கரையிலுள்ள நீர் மட்டங்களை கடல் உள்வாங்கும். இது ஒரு சாதாரண நிலை. கிணற்றில் நீர் மட்டம் குறைவது கூடுவதை நாங்கள் முதலில்; இதனை கவனித்திருக்க மாட்டோம். இது இரவில் இடம்பெறுவதொன்று  இப்போது நாங்கள் ஏதே ஒரு பிரச்சனை என்றதும் கிணற்றை பாத்து தண்ணீர் குறையுது கூடுது என்று எனவே பயப்படதேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் மேலும் தெரிவித்துள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: