19 May 2020

தமிழ் ஓவ் லங்கா இளைஞர் அமைப்பால் வழங்கப்பட்ட நிவாரண உதவி

SHARE
(விஜய்)

நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா நோயினால் வீடுகளில் சுயதொழில் இழக்கப்பட்டு சாப்பிடுவதற்கு கஸ்டப்பட்டு கொண்டிருக்கும் வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு தமிழ் ஓவ் லங்காவினால்  நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டது. எமது நாட்டிலிருந்து தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாடுகளில் சென்று தொழில் புரிந்துகொண்டிருக்கும் நண்பர்களின் ஏற்பாட்டில் இவ் நிவாரண உதவிகள் கடந்த இருவாரங்களாக கிழக்கு மாகாணத்தில் வழங்கப்படுகின்றது. 


தமிழ் ஓவ் லங்காவின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.இளந்தீபன் தலைமையில் அடையாளப்படுத்தப்பட்ட பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டது.சுமார் 1400 குடும்பங்களுக்கு 1300 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கப்பட்டது. 

வாகரை,பெரியநீலாவனை, சேனைக்குடியிருப்பு, கல்லோயா குடியேற்ற கிராமங்களான 7ம் கிராமம்,  15ம் கிராமம்,சென்றெல்கேம்ப்,  கல்வெட்டை,16ம் கிராமம்,  துறைநீலாவணை, திருகோணமலை உட்பட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும் நண்பர்கள்,உறவுகளின் நிதிப்பங்களிப்பினால் நிவாரணம் வழங்கப்பட்டது.







SHARE

Author: verified_user

0 Comments: