ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பின் இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்பியிருந்தது.
இன்று(18) காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்கத்தின் எதிர்பார்புக்கமைய இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்பியிருந்தது வழமைபோல வர்த்தக நிலையங்கள் மரக்கறி, மீன்வியாபார நிலையங்கள் யாவும் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கையில் ஈடுபாடுகாட்டியிருந்தன.
இதேபோல் மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் மற்றும் அரச திணைக்களங்களின் அலுவலகங்களும் திறக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அலுவலர்களின் வருகையில் மக்கள் பணிகள் அரசின் சுகாதார சட்டதிட்டங்களை பேணி சமூக இடைவெளிகளில் மக்களும் உத்தியோகத்தர்களும் செயல்பட்டு பணிகள் இடம்பெற்றன, இன்று 50 வீதத்துக்கு மேற்பட்ட அரசசேவையாளர்கள் இன்று கடமைக்கு வருகை தந்திருந்தனர்.
இது தவிர அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளும் வழமையான போக்குவரத்து சேவைகளை நடாத்தியிருந்தன. அரசபோக்கு வரத்து பெரூந்துளில் சமூக இடைவெளி சட்டங்களை பேணி சேவையிலீடுபட்டிருந்தன.
0 Comments:
Post a Comment